நற்குணங்கள் பண்பாடுகள் பற்றிய பகுதி :

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : முஃமின்களில் நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்'. திர்மிதீ மற்றும் அஹ்மத் ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.

பதில் : 1- அவை அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.
2- அவை மக்களின் அன்பை பெற்றுக்கொள்ள காரணமாக அமைந்துள்ளமை.
3- நற்பண்புகள் மீஸானில் மிகக் கணதியானவையாக இருக்கின்றமை.
4- நற்பண்புகளை கடைபிடித்து ஓழுகுவதால் அதற்குக் கிடைக்கும் கூலியும் வெகுமதியும் பல மடங்காக கிடைக்கின்றமை.
5- இறை நம்பிக்கையின் பரிபூரணத் தன்மைக்கான அடையளாமாக இருக்கின்றமை.

பதில் : நாம் பண்பாடுகளை –நற்குணங்களை- அல்குர்ஆனிலிருந்தும் நபி வழிமுறைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான்: "நிச்சயமாக இந்தக் குர்ஆன் முற்றிலும் நேரான வழியினைக் காண்பிக்கிறது" (ஸூறதுல் இஸ்ரா : ٩) மேலும் இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : "நற்குணங்களைப் பூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்". (ஆதாரம் : அஹ்மத்)

பதில் : இஹ்ஸான் என்பது அதி உயர்பண்பாடாகும். அது ஒரு அடியான் பெற்றிருக்க வேண்டிய அல்லாஹ்வின் தொடர் அவதானம் பற்றிய உணர்வையும், படைப்பினங்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு நன்மை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
"நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களிலும் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விதியாக்கியுள்ளான்". (ஆதாரம் : முஸ்லிம் .)
இஹ்ஸான் எனும் பண்பின் வடிவங்கள் சில பின்வருமாறு :
அல்லாஹ்வை வணங்கி வழிபடுதல் என்ற விடயத்தில் இஹ்ஸானைக் கடைப்பிடித்தல் என்பது அவனை வணங்குவதில் இக்லாஸ் எனும் உளத்தூய்மையை கடைப்பிடித்து ஓழுகுவதைக் குறிக்கும்.
சொல்லாலும் செயலாலும் பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது.
இரத்த உறவுகளுடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து உபகாரம் செய்தல்.
அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல்.
அநாதைகள் மற்றும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து உதவி உபகராரம் செய்தல்.
உம்மோடு மோசமான முறையில் நடந்து கொண்டவருடன் நல்ல முறையில் நடந்து கொள்தல்.
பேசும் போது அழகிய முறையில் பேசுதல்.
தர்க்கம் புரியும் போது அழகிய வழிமுறையைக் கடைப்பிடித்தல்
விலங்கினத்தோடு நல்ல முறையில் நடந்து கொள்தல்.

பதில்- அல் இஹ்ஸான் (நல்ல முறையில் நடந்து கொள்ளல், சிறப்பாகச் செய்தல்) என்பதன் எதிர் பதம் அல் இஸாஆ (தீங்கிழைத்தல், மோசமாக நடந்து கொள்ளல்) என்பதாகும்.
அவற்றில் பின்வரும் வடிவங்களைக்குறிப்பிட முடியும். அல்லாஹ்வை வணங்கி வழிப்படடும் போது உளத்தூய்மையின்றி வணங்குதல்.
பெற்றோரைத் துன்புறுத்தல்.
உறவைத் துண்டித்தல்.
அயளவருடன் மோசமாக நடந்து கொள்ளுதல்.
ஏழை எளியவருக்கு உபகாரம் செய்யாதிருத்தல், தீய செயல்களில் ஈடுபடுதல் மற்றும தீய வார்த்தைகள் பேசுதல் போன்றன இதில் அடங்குகின்றன.

பதில் :
பதில் :1- அல்லாஹ்வின் கடமைகளில் அமானிதம் பேணுதல்.
அதன் வடிவங்கள் :
அல்லாஹ் எங்கள் மீது விதித்துள்ள கடமைகளான தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்றவற்றை அதற்குரிய விதத்தில் நிறைவேற்றுதல் போன்றவை அல்லாஹ்வின் விடயத்தில் அமானிதத்தைக் கடைப்பிடித்தலுக்குரிய வடிவங்களாகும்.
2- படைப்பினங்களின் உரிமைகளில் அமானிதம் பேணுதல் என்பது பின்வரும் விடயங்களைக் குறிக்கிறது :
மனிதர்களின் மானங்கள்,
செல்வங்கள்,
உயிர்கள்,
மற்றும் அவர்களின் இரகசியங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன் உன்னிடம் அடைக்களமாக மக்களால் தரப்பட்ட அனைத்தையும் இது குறிக்கிறது.
அல்லாஹ் வெற்றியாளர்களின் பண்புகளைக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
"மேலும் அவர்கள் தங்களின் அமானிதங்களையும் தமது வாக்குறுதிகளையும் பேணி நடப்பார்கள்". (முஃமினூன் : 8).

பதில் : கியானா' துரோகம், மோசடி என்பது அல்லாஹ்வினதும் மக்களினதும் உரிமைகளை வீணடிப்பதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"முனாபிகின் (நயவஞ்சகனின்) பண்புகள் மூன்றாகும். என்று குறிப்பிட்டுவிட்டு அவற்றில் ஒன்றாக "நம்பிக்கைவைக்கப்பட்டால் துரோகம் மோசடி செய்வான்" என்று சொன்னார்கள். ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : நடைமுறைக்கு ஒத்து போகிறவிதத்திலும் அல்லது ஒரு விடயத்தை உள்ளவாறே எடுத்துக் கூறுதலை குறிக்கிறது.
அதன் வடிவங்களில் சில :

மனிதர்களுடன் பேசும்போது உண்மை பேசுதல்.
ஒரு விடயத்தில் வாக்குக்கொடுத்தால் அதில் உண்மையாக நடந்து கொள்ளல்.
சொல் செயல் அனைத்திலும் உண்மையாக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"நிச்சயமாக உண்மை பேசுதல் நற்செயலுக்கு வழிகாட்டுகிறது. நற்செயல் சுவர்கம் செல்ல வழிகாட்டுகிறது, ஒரு மனிதன் அவன் உண்மையே பேசிக்கொண்டிருப்பான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுவான்". ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : பொய் பேசுதல், இது யதார்த்திற்கு முரணானது. அதாவது மக்களிடம் பொய் சொல்வது, காலக்கெடுக்கு மாற்றம் செய்தல், பொய்சாட்சியம் கூறுவது போன்றன இதில் அடங்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
"நிச்சயமாக பொய் தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. ஒரு மனிதன் பொய்சொல்லிக் கொண்டே இருப்பான். இறுதியில் அவன் மிகப்பெரும் பொய்யன் என்று அல்லாஹ்விடத்தில் எழுதப்படுவான்". ஆதராம் : புஹாரி முஸ்லிம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "நயவஞ்சகனின் பண்பு மூன்றாகும், அவற்றில் ஒன்று அவன் பேசினால் பொய்யுரைப்பான், வாக்களித்தால் மாறு செய்வான்". ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமையைக் கடைப்பிடித்தல்.
பாவம் செய்வதைவிட்டும் மனதை அடக்கி பொறுமை கொள்தல்.
இறைவிதியின் படி நிகழும் துன்பங்களில் பொறுமையாக இருந்து அல்லாஹ்வை எல்லா நிலைகளிலும் புகழ்தல்.
அல்லாஹ் கூறுகிறான் :
"அல்லாஹ் பொறுமையாளர்களை விரும்புகிறான்". (ஸூறா ஆல இம்ரான் : 146). நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "ஓர் இறை விசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமானவை. அவனது விவகாரம் அனைத்தும் அவனுக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இது ஓர் இறை விசுவாசியைத் தவிர மற்றெவருக்கும் அவ்வாறு அமைவதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியூட்டும் விடயம் ஏற்பட்டால், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமை செய்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது". (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில்: அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் பொறுமையின்மை, மேலும் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் வேகமாக செயற்படுதல், மற்றும் சொல் செயல் மூலம் அல்லாஹ்வின் விதியை வெறுத்து கோபம் கொள்ளுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.
இதன் வடிவங்களில் சில :

மரணத்தை ஆசை கொள்ளுதல்.
கன்னத்தில் அரைந்து கொள்ளல்.
ஆடையைக் கிழித்தல்.
தலை விரிகோலமாக இருத்தல்.
அழிவு ஏற்பட வேண்டும் என தனக்கு எதிராகப் பிரார்த்தித்தல் போன்றவைகளாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"சோதனையின் தரத்திற்கு ஏற்பவே கூலியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒரு கூட்டத்தை விரும்பினால் அவர்களை சோதிப்பான். அவ்வேளை யார் குறிப்பிட்ட சோதனையை மனத்திருப்தியுடன் ஏற்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கிறது. யார் கோபம் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம் உள்ளது". ஆதாரம் : திர்மிதி மற்றும் இப்னு மாஜா.

பதில் : மக்கள் தங்களுக்கு மத்தியில் சத்தியம் மற்றும் நன்மையான காரியங்களில் ஒத்துழைத்து நடந்து கொள்வதையே அத்தஆவுன் என்பது குறிக்கிறது.
ஒத்துழைப்பாக நடந்து கொள்வதின் சில வடிவங்கள் :

- உரிமைகளை திருப்பி ஒப்படைப்பதில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்.
- அநியாயக்காரனின் அநியாத்தைத் தடுப்பதில் பரஸ்பரம் ஒத்துழைத்தல்.
- மக்களின் மற்றும் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஒத்துழைப்பாக நடந்து கொள்ளுதல்.
- நன்மையான எல்லா காரியங்களிலும் பரஸ்பரம் ஓத்துழைத்தல்.
பாவமான காரியம், தொந்தரவு செய்தல் அத்துமீறி நடத்தல் போன்றவற்றில் ஓத்துழைப்பு வழங்காது நடந்து கொள்ளுதல்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"நன்மை செய்வதிலும் அல்லாஹ்வை அஞ்சி நடப்பதிலும் பரஸ்பரம் உதவியாக இருந்து கொள்ளுங்கள், மேலும் பாவம் செய்வதிலும் வரம்பு மீறுவதிலும் பரஸ்பரம் உதவியாக இருக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகவும் கடுமையானவனாவான்". (ஸூரா அல்மாஇதா : 2). நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கும் விடயத்தில் ஒரு கட்டடத்தைப் போன்றோர் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றைய பகுதிக்கு வழுச்சேர்க்கிறது". ஆதராம் : புஹாரி முஸ்லிம். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : "ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் மற்றவருக்கு அநியாயம் செய்யமாட்டார். அவர் மற்றவருக்கு உதவி செய்வதையும் கைவிடமாட்டார். யார் தமது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவாரோ, அவரின் தேவையை இறைவன் நிறைவேற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்குவாரோ, அவரின் மறுமைநாளின் கஷ்டங்களை இறைவன் நீக்கிவிடுகின்றான். யார் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கிறாரோ, அவரின் குறைகளை இறைவன் மறுமைநாளில் மறைத்துவிடுவான்". ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் :1- அல்லாஹ்வின் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது இருப்பதாகும்.
2- மனிதர்களுடன் நடந்து கொள்ளும் விடயத்தில் வெட்கம் பேணல் என்பது அசிங்கமான தரக்குறைவான பேச்சுக்களை பேசுவதை விட்டுவிடுதல் மற்றும் அவ்ரத்தை –வெட்கத்தளங்களை –வெளிக்காட்டுவதை விட்டுவிடுதல் போன்றவைகளைக் குறிக்கும்.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "ஈமான் அறுபது அல்லது எழுபதற்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டதாகும். அதில் முதன்மையானது "லாஇலாஹ இல்லல்லாஹ்" எனும் ஏகத்துவக் கலிமாவாகும். அதில் தாழ்ந்தது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும்". (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : வயதில் மூத்தோருக்கு கருணை காட்டுவதுடன் அவர்களை மதித்து நடந்து கொள்ளுதல்.
சிறியோர் மற்றும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுதல்.
வரியவர் எளியவர் தேவையுடைவர் ஆகியோருக்கு கருணை காட்டல்.
விலங்கினங்களுக்கு துன்பம் இழைக்காது உணவளிப்பதன் மூலம் கருணை காட்டல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு கூறினார்கள் :
"முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு காட்டுவதிலும் பாசத்தோடு நடந்து கொள்வதிலும் பரிவு காட்டுவதிலும் ஒரு உடலைப் போன்றவராய் காண்பீர். அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பிற்கு வலி ஏற்பட்டுவிட்டால் ஏனைய உறுப்புகளும் தூக்கமின்மையாலும் கஷ்டத்தாலும் அவதிப்படுகின்றன". ஆதராம் : புஹாரி முஸ்லிம். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரக்கம் காட்டுபவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்". ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில் : 1- அல்லாஹ்வை நேசித்தல்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"இறைநம்பிக்கை கொண்டவர்களோ அல்லாஹ்வை அனைவரையும்விட அதிகமாக நேசிக்கிறார்கள்". (ஸூறதுல் பகரா :165 ).
2- இறைத்தூதரை நேசித்தல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது பெற்றோரையும், அவரது குழந்தையையும் விட நான் மிக்க நேசத்திற்குரியவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்". (ஆதாரம் : புஹாரி).
3- முஃமின்களை நேசித்தல். அதாவது நீ உனக்கு நன்மையை விரும்புவது போல் அவர்களுக்கும் நன்மையை விரும்புதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :
"தான் விரும்புபவற்றை தனது சகோதரனுக்கும் விரும்பாத வரையில் உங்களில் ஒருவரும் உண்மை விசுவாசியாக மாட்டார்". (ஆதாரம் : புஹாரி).

பதில் : மனிதர்களை சந்திக்கும் வேளை ஏற்படுகின்ற மகிழ்ச்சி புன்னகை, இரக்கம், சந்தோச வெளிப்பாடு ஆகியவைவைகளால் முகத்தில் தோன்றும் மலர்ந்த நிலையே முகமலர்ச்சி எனக் கூறப்படுகிறது.
அதாவது ஒரு மனிதனை சக மனிதர்களிலிருந்தும் அந்நியப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு வெறுப்பேற்படுமாறு முகம் சுளித்து கடுகடுப்பாக இருத்தல் என்ற பண்பிற்கு எதிரானது.
இதன் சிறப்புக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவைகளாகும். அபூதர் அல்கிபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் பின்வருமாறு கூறினார்கள் : (அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'. (ஆதாரம் : முஸ்லிம் .) மேலும் நபி (ஸல்) கூறினார்கள் : உனது சகோதரனின் முகத்தைப்பார்த்து புன்னகைப்பதும் உனக்கு தர்மமாகும்'. (ஆதாரம் : திர்மிதி).

பதில் : பிறரிடம் உள்ள அருள் நீங்கிட வேண்டும் என்று ஆசைவைப்பது, அல்லது பிறரிடம் காணப்படும் அருளை வெறுப்பதே பொறாமையாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படுகின்ற தீங்கிலிருந்து (நான் பாதுகாவல் தேடுகிறேன்)". (பலக் : 5).
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் :
நீங்கள் ஒருவருக்கொருவர் பகைத்துக் (கோபித்துக்) கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணித்து நடக்காதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).

பதில் : ஏளனம் என்பது உனது சகோதர முஸ்லிமை கேலி செய்வதும் அற்பமாக –தரக்குறைவாக கருதுவதுமாகும். இது தடைசெய்யப்பட்ட ஒரு விடயமாகும்.
இது தடுக்கப்பட்டது என்ற விடயத்தை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
"இறைநம்பிக்கையாளர்களே, (முஃமின்களே!) எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் (பரிகசிக்கப்படுவோர்), இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரரகள்". (ஸூறதுல் ஹுஜுராத் :11)

பதில் : ஒரு நபர் தான் பிறரை விட மேலானவர் எனக் காட்டிக் கொள்ளாத நிலையே பணிவாகும். எனவே இவ்வாறான ஒருவர் மக்களை தரக்குறைவாக பார்க்கமாட்டான், சத்தியத்தை புறக்கணித்து நடக்கவும்மாட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"அர்ரஹ்மானின் (உண்மையான) அடியார்கள்; எத்தகையவர்களெனில் அவர்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள்". (ஸூறதுல் புர்கான் : 63). அதாவது "ஹெளனன்" என்றால் பணிவுள்ளவர்களாக நடப்பார்கள் என்பதாகும். நபி (ஸல்) கூறுகிறார்கள் : யார் அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் உயர்த்தி விடுவான்'. (ஆதாரம் : முஸ்லிம் .) மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள் : உங்களில் ஒருவர் இன்னொருவர் மீது பெருமையடித்துக் கொள்ளாதிருப்பதற்காகவும் மற்றவர் மீது அத்துமீறி நடக்காது இருப்பதற்காகவும் நீங்கள் பணிவை கடைப்பித்து ஒழுக வேண்டும் என அல்லாஹ் எனக்கு வஹி அறிவித்துள்ளான்'. (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : 1- சத்தியத்தியத்தின் மீது ஆணவம் கொள்ளுதல். அதாவது, சத்தியத்தை மறுத்து அதனை ஏற்காமல் இருப்பதாகும்.
2- மனிதர்களிடத்தில் பெருமையாக நடந்து கொள்ளுதல் என்பது அவர்களை அற்பமாக கருதி அவர்களை இழிபடுத்துவதாகும்.
நபி (ஸல்) கூறுகிறார்கள் : "எவனுடைய மனதில் அனு அளவு பெருமை இருக்குமோ அவன் சுவர்க்கம் புகமாட்டான்". அப்போது அருகில் இருந்தவர், ஒருவர் தனது ஆடை அழகாக இருக்கவேண்டும்; தமது காலணி அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது பெருமையாகாதா? என வினவினார். அதற்கு நபியவர்கள : "அல்லாஹ் அழகானவன், அவன்
அழகை விரும்புகிறான். (இவ்வாறு விரும்புவது பெருமையாகாது) பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும், மக்களை இழிவாக நினைப்பதும் ஆகும்". (ஆதாரம் : முஸ்லிம் .)
(பதருல் ஹக்) என்பது சத்தியத்தை மறுப்பதைக் குறிக்கிறது.
(கம்துன்னாஸ்) என்பது மனிதர்களை இழிவாகக் கருதுதல் என்பதாகும்.
அழகான ஆடை மற்றும் அழகான காலணி ஆகியன பெருமையில் உள்ளடங்காது.

பதில் - கொடுக்கல் வாங்கலின் போது பொருட்களின் குறைகளை மறைத்து நுகர்வோருக்கு மோசடி செய்தல்.
- கல்வியை கற்பதில் மோசடி செய்தல் . மாணவர்கள் பரீட்சைகளின் போது மோசடி செய்வது இதற்கான உதாரணம்.
- பேச்சில் மோசடி செய்வது, பொய்சாட்சியம் மற்றும் பொய்யுரைத்தல் போன்றதே.
- மனிதர்களுடன் சேர்ந்து முடிவு செய்து பேசியதை நிறைவேற்றாமையும் மோசடியாகும்.
மோசடி தடை செய்யப்பட்டுள்ளது பற்றிய ஹதீஸ் பின்வருமாறு :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்; உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. (தானியச்) சொந்தக்காரரே! இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது, யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதற்கு நபிகளார் : மக்கள் பார்த்து வாங்குவதற்காக இந்த உணவை மேலால் வைத்திருக்கலாமே, என்று கூறிவிட்டு யார் மோசடி செய்கிறாரோ அவர் என்னை சார்ந்தவர் அல்ல' என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம் .)
"அஸ்ஸுப்ரது" என்பது உணவுக் குவியல் என்பதைக் குறிக்கிறது.

பதில் - உனது சகோதரன் இல்லாத போது அவனைப்பற்றி அவன் வெறுப்பதைக் கூறுவதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம்பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்து விட்ட சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்,நிகரற்ற அன்புடையோன்". (ஸூறதுல் ஹுஜுராத் :12)

பதில் : மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒருவர் பிறர் பற்றி இன்னொருவரிடம் கூறுதல் கோள் ஆகும். (குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும்.)
நபி (ஸல்) கூறினார்கள் : கோள் சொல்லுபவன் சுவனம் நுழைய மாட்டான்'. (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : நல்லதைச் செய்வதிலும், ஒருவன் அவசியம் செய்யவேண்டிய விடயங்களில் ஆர்வமற்று மந்த நிலையில் இருத்தல்.
அவ்வாறான விடயங்களில் ஒன்றுதான் கட்டாயக் கடமைகளைச் செய்வதில் சோம்பரித்தனமாக இருத்தல்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றி விடுகின்றான், அவர்கள் தொழுகைக்காக நின்றால் சோம்பேரிகளாகவும் மக்களுக்கு காட்டுவோராகவும் நிற்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவு கூறுகின்றனர்". (ஸூறதுன்னிஸா : 142)
எனவே ஒரு இறை விசுவாசி (முஃமின்) சோம்பல், மனச்சோர்வு, மந்தம் ஆகியவற்றைக் கைவிட்டு, இவ்வுலகவாழ்வில் எல்லாம் வல்ல அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் உழைப்பு, ஈடுபாடு, கடின உழைப்பு, விடா முயற்சி, போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

பதில் :கோபம் இரண்டு வகைப்படும் அவைகளாவன,
1- வரவேற்கத்தக்க (புகழத்தக்க) கோபம் : இது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதாகும். அதாவது இறைநிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் ஏனையோரும் அல்லாஹ்வினால் தடைசெய்ய்பட்டவற்றை மதிக்காது நடக்கும் போது அல்லாஹ்வுக்காக கோபம் கொள்வதையே வரவேற்கத்தக்க கோபம் எனப்படும்.
2- கண்டிக்கத்தக்க கோபம் : அதாவது ஒரு மனிதன் தனக்கு அவசியமில்லாத விடயங்களை கூறவும் செய்யவும் தூண்டும் கோபமே கண்டிக்கத்தக்க கோபமாகும்.
கண்டிக்கத்தக்க கோபத்திற்கான சிகிச்சை முறைகள் :

1- வுழு செய்தல்.
2- நின்று கொண்டிருந்தால் உட்காருதல். உட்கார்ந்திருந்தால் சாய்ந்து கொள்ளளுதல்.
3- 'கோபம் கொள்ளாதே' என்ற நபியவர்களின் அறிவுரையை கடைப்பித்து ஒழுகுதல்.
4- கோபம் ஏற்படும் போது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ளுதல்.
5- அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் என்று கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
6- மௌனமாக இருத்தல்.

பதில் : மனிதர்களது தவறுகளையும் அவர்கள் அவசியம் மறைக்க வேண்டியவற்றையும் தேடிக் கண்டறிதல். (துருவித்துருவி ஆராய்தல்)
அதில் தடைசெய்யப்பட்ட சில வடிவங்கள் :
- வீட்டினுள் நடைபெறும் மனிதர்களின் அந்தரங்கங்களை நோட்டமிடுதல்.
- ஒருவர் ஒரு கூட்டத்தினரின் உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் செவிசாய்ப்பது.
அல்லாஹ் கூறுகின்றான் :
"நீங்கள் (பிறர் குறைகளை) துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்". (ஸூறதுல் ஹுஜுராத் :12)

பதில் : ஊதாரித்தனம் (வீண்விரயம்) என்பது செல்வத்தை முறை கேடாக செலவு செய்தல்.
அதன் எதிர் பதம் கஞ்சத்தனம் ஆகும், அதாவது செல்வத்தை உரியவற்றிற்கு செலவு செய்யாது இருத்தலே கஞ்சத்தனமாகும்.
இதில் சரியான நிலைப்பாடு யாதெனில் இவ்விரண்டுக்கும் மத்தியில் நடு நிலைமை பேணி நடந்து கொள்வதாகும். ஒரு முஸ்லிம் பெருந்தன்மையோடு தயாள குணத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"மேலும் அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள். (கஞ்சத்தனமாக) குறைக்கவும் மாட்டார்கள், இவற்றுக்கிடையே நடுத்தரத்திலானதாக இருக்கும்". (ஸூறதுல் புர்கான் : 67)

பதில் : கோளைத்தனம் என்பது பயப்பட தேவையில்லாத விடயங்களுக்கு பயப்படுதல்.
உதாரணம் :
உண்மையை சொல்வதற்கு பயப்படுதல், ஒரு தீமையைத் தடுப்பதற்கு பயப்படுதல்.
தைரியம் (வீரம்) என்பது சத்தியத்தியத்தை நிலைநாட்டுவதற்கு துணிவு கொள்ளுதல் , உதாரணம் : போரட்டக்களத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பதற்காக முன்வருதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிரார்தனையில் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள் :
"யா அல்லாஹ் ! கோழைத் தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்". மேலும் நபி (ஸல்) கூறுகிறார்கள் : பலசாலியான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவனும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவனுமாவான். மேலும் இருவரிலும் நன்மை உண்டு'. (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : - திட்டுதல், ஏசுதல் போன்றன.
- ஒருவரைப் பார்த்து மிருகம் என்றோ அது போன்ற வார்த்தைகளைக் கூறுதல்.
- மனிதர்களின் மானங்களுடன் சம்பந்தப்பட்ட மோசமான அருவருக்கத்தக்க வார்த்தைகளைக் குறிப்பிடுதல்.
இவைகள் அனைத்தையும் நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் : ஒரு உண்மை முஃமின் மற்றவர்களை குறை கூறுபவனாகவோ சபிப்பவனாகவோ மானக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்கமாட்டான்'. ஆதாரம் : திர்மிதி, இப்னு ஹிப்பான்.

பதில் 1 : அல்லாஹ் உனக்கு நற்பண்புளை தந்து அவற்றை கடைப்பிடித்து ஒழுகிட துணைசெய்ய வேண்டும் என்று பிரார்த்தித்தல்.
2- எப்போதும் அல்லாஹ் தன்னை காண்காணித்து, உன்னை பற்றி அறிந்து உனது எல்லா விவகாரகங்களையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு இருத்தல்.
3- நற்பண்புகளினால் கிடைக்கும் வெகுமதி குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை சுவர்க்கத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
4- துர்குணங்களால் கிடைக்கும் தீய முடிவு குறித்து சிந்தித்தல். ஏனெனில் அவை நரகத்திற்கு செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும்.
5- நற்குணங்கள் அல்லாஹ்வினதும் மனிதர்களினதும் நேசத்தைப் பெற்றுத்தரவல்லது. தீய குணங்களோ அல்லாஹ்வின் கோபத்தையும் மனிதர்களின் வெறுப்பையும் பெற்றுத்தரவல்லது.
6- நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்து அதனை முன்மாதிரியாகக் கொள்ளல்.
7- நல்லோர்களுடன் தோழமை கொண்டு, தீயவர்களுடன் தோழமை கொள்வதை விட்டும் தவிர்ந்திருத்தல்.