பகுதி (1) இஸ்லாமிய நம்பிக்கைக் (இறையியல்) கோட்பாடு

பதில் : எனது இரட்சகன் அல்லாஹ். அவனே தனது அருளினால் என்னையும் அகிலத்தாரையும் இரட்சித்து போசிப்பவனாவான்.
ஆதாரம் :
அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் : "அல்ஹ்ம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்" (அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்). [ஸூறதுல் பாதிஹா (2)]

பதில் : இஸ்லாம் என்பது : ஏகத்துவப்படுத்துவதன் மூலம் அல்லாஹ்வுக்கு முழுமையாக சரணடைதல், வழிபடுவதன்மூலம் அவனுக்கு கட்டுப்படுதல், இணைவைத்தல் மற்றும் இணைவைப்பாளர்களைவிட்டும் முழுமையாக விலகி இருப்பதுமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும்". (ஆல இம்ரான் : 19).

பதில்: முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அல்லாஹ் கூறுகிறான் : "முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்". (ஸூறதுல்பத்ஹ் (29))

ஓரிறைக்கொள்கையின் வார்த்தை (கலிமதுத் தவ்ஹீத் ) 'லாஇலாஹ இல்லல்லாஹ்; 'என்பதாகும் அதன் கருத்து உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வதைதவிர வேறு யாருமில்லை என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "அல்லாஹ்வைத்தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக". (ஸூறா முஹம்மத் : 19)).

பதில் : அல்லாஹ் வானத்தில் அர்ஷிற்கும் அனைத்து படைப்பினங்களுக்கு அப்பால் உள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்: "அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்". (ஸூறா தாஹா : 5) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "அவனே தனது அடியார்களுக்கு மேலிருந்து அடக்கி ஆள்பவன், மேலும் அவன் ஞானமிக்கவன் நன்கறிந்தவன்". (ஸூறதுல் அன்ஆம் :18)

பதில் : அதன் கருத்தாவது, அல்லாஹ் அவர்களை உலகத்தாருக்கு நன்மாராயம் கூறக்கூடியவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாகவும் அனுப்பியுள்ளான் என்பதாகும்.
பின்வருவன அதில் கடமையாகும் :

1-அவர்களின் (நபியவர்களின்) கட்டளைகளை ஏற்று நடத்தல்.
2-அவர்கள் அறிவித்தவற்றை உண்மைப்படுத்துதல்.
3-அவர்களுக்கு மறுசெய்யாது இருத்தல்.
4-அவர்கள் மார்க்கமாக குறிப்பிட்டவற்றை கொண்டு மாத்திரமே அல்லாஹ்வை தூய்மையாக வணங்குதல். அதாவது அவர்களின் ஸுன்னாவை (வழிமுறையை) பின்பற்றி (பித்ஆவை) புதிதாக மார்க்கம் என்றபெயரில் உருவாக்கப்பட்டவற்றை விட்டும் விலகி நடத்தல்.
அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு பிரஸ்தாபிக்கிறான் :
"யார் இறைத்தூதருக்குக் கட்டுப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராவார்" (ஸூறதுன்நிஸா: 80) மேலும் அல்லாஹ் குறிப்பிடுகையில் : "அவர் மனோ இச்சையின் படி பேசுவதில்லை.அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியே தவிர வேறில்லை". [ஸூறதுன் நஜ்ம் (3,4)] மேலும் அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் : "உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது". [ஸூறதுல் அஹ்ஸாப்: 21)]

பதில் : இணையில்லாத அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிப்படுவதற்கே எம்மைப் படைத்தான்.
வீண் கேளிக்கையிலோ விளையாட்டிலோ ஈடுபடுவதற்காகவல்ல.
அல்லாஹ் கூறுகிறான் :
"நான் ஜின் மற்றும் மனித இனத்தை என்னை வணங்கி வழிபடுவதற்காகவேயன்றி படைக்கவில்லை". (ஸூறதுஸ் ஸாரியாத் : 56).

பதில் : இபாதத் (வணக்க வழிபாடு) என்பது வெளிப்படையான, மறைவான வார்த்தைகள் மற்றும் செயல்களில் அல்லாஹ் விரும்புகின்ற, அவன் பொருந்திக் கொள்கின்ற அனைத்திற்குமான ஒரு பொதுவான பெயராகும். (அதாவது இறைவனின் விருப்பத்திற்கேற்ப அமையும் மனிதனின் சொல், செயல் அனைத்தும் இறைவழிபாடேயாகும்.)
வெளிப்படையான இபாத்திற்கு, அல்லாஹ்வை நாவால் துதிசெய்தல், புகழ்தல், பெருமைப்படுத்தல், தொழுதல், ஹஜ் செய்தல் போன்றவை உதாரணங்களாகும்.
மறைவான இபாதத்திற்கு அல்லாஹ்வின் மீது பொறுப்புச்சாட்டுதல், அவனைப் பயப்படுதல், அவனிடமே எதிர்பார்த்து ஆதரவு வைத்தல் போன்றவை உதாரணங்களாகும்.

பதில் : எம்மீதுள்ள மிகப்பெரும் கடமை தவ்ஹீத் ஆகும். அதாவது அல்லாஹ்வை -ஒருமைப்படுத்துவதாகும்- ஒருவன் என ஏற்று வாழ்வதாகும்.

பதில் : தவ்ஹீது மூன்று வகைப்படும், 1: தவ்ஹீதுர் ருபூபிய்யா. அதாவது, அல்லாஹ்வே சிருஷ;டிப்பவன், ரிஸ்க் அளிப்பவன், அதிபதி, அனைத்தையும் நிருவகிப்பவன் என்றும் இவை அனைத்திலும் அவனுக்கு எந்த இணையாளரும் இல்லை எனவும் இறைவிசுவாசம் கொள்ளல்.
2-தவ்ஹீதுல் உலூஹிய்யா : வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதாகும். அவனைத் தவிர வணங்கி வழிபடுவதற்கு எவரும் கிடையாது.
3-தவ்ஹீதுல் அஸ்மாஇ வஸ்ஸிஃபாத். இது (அல்குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் உதாரணம் கூறாமல்; உவமைப்படுத்தாமல்; மறுக்காமல்; விசுவாசுப்பதைக் குறிக்கும்.
தவ்ஹீதின் மூன்று வகைகளுக்குமான ஆதாரம்; அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
"அவனே வானங்கள் பூமி மற்றும் அவையிரண்டுக்கம் இடைப்பட்டவற்றினதும் இரட்சகன், அவனையே நீர் வணங்குவீராக! மேலும் அவனை வணங்குவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! அவனுக்கு நிகரானவர் எவரையேனும் நீர் அறிவீரா?!" (ஸூறா மர்யம் : 65 )

பதில் - தூயோனாகிய அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஆகும்.
அல்லாஹ் கூறினான் :
"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்". (ஸூறதுன்னிஸா :48)

பதில் : வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு திருப்புதல்.
ஷிர்கின் (இணைவைத்தலின்) வகைகள் :
1) ஷிர்குன் அக்பர் : (பெரியவகை ஷிர்கிற்கு) உதாரணம் அல்லாஹ் அல்லாதவரிடம் பிரார்த்தித்தல், அல்லாஹ் அல்லாதவருக்கு ஸுஜூது செய்தல் மற்றும் அறுத்துப் பலியிடுதல் போன்றவைகளாகும்.
2) ஷிர்குன் அஸ்கர் :
சிறியவகை ஷிர்கிற்கு உதாரணம் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்தலும் , அல்லது ஏதாவது ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்ள அல்லது ஒரு தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெற நாடி தாயத்துக் கட்டிக்கொள்வதும், சாதாரண முகஸ்துதியும் ஆகும். முகஸ்துதிக்கான உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்கிறார்கள் என்பதற்காக தொழுகையை அழகாக தொழுவதைக் குறிப்பிடலாம்.

பதில் : இல்லை அல்லாஹ் மாத்திரமே மறைவானவற்றை அறிகிறான்
அல்லாஹ் கூறுகிறான் : "அல்லாஹ்வைத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் இருப்பவர்கள் எவரும் மறைவானவற்றை அறியமாட்டார்கள். (மரணித்தோர்) எப்போது மீண்டும் எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உணரமாட்டார்கள் என்று நபியே நீர் கூறுவீராக!". (ஸூறதுன் நம்ல் : 65)

பதில் : ஈமானின் அடிப்படைகள் ஆறு, அவைகள் பின்வருமாறு : 1- அல்லாஹ்வை நம்புதல்.
2-மலக்குமார்களை நம்புதல்.
3-வேதங்களை நம்புதல்.
4-நபிமார்களை –தீர்கதரிசிகளை- நம்புதல்.
5- மறுமை நாளை நம்புதல்.
6-நன்மை தீமை இறைவிதியின் படியே நிகழும் என்பதை நம்புதல்.
இதற்கான ஆதாரமாக முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பிரபல்யமான ஜிப்ரீல் (அலை) அவர்களின் ஹதீஸ் உள்ளது. அதில் ஜிப்ரீல் அவர்கள் நபியவர்களிடம், "ஈமான் பற்றி அறிவித்துத் தாருங்கள் என கேட்டதற்கு, நபியவர்கள் நீங்கள் அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் அவனின் வேதங்களையும் அவனின் தூதர்களையும் நம்பவேண்டும் மேலும் நன்மை தீமை இறைவிதியின் படியே நிகழும் என்பதையும் நம்ப வேண்டும்" எனக் கூறினார்கள்.

பதில் : அல்லாஹ்வை நம்புதல். அது பின்வரும் விடயங்களை உள்ளடக்குகிறது :
- அல்லாஹ் மாத்திரமே உன்னை படைத்து, உனக்கான வாழ்வாதாரத்தை தருபவன் என்பதையும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பினங்களின் உரிமையாளன்; என்றும் அவைகளின் விவகாரங்களை திட்டமிடுபவன் என்றும் உறுதியாக நம்புதல் வேண்டும்.
- மேலும் அவன்தான் உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன். அவனைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு யாருமில்லை என்று நம்பவேண்டும்.
அல்லாஹ் மகத்தானவன் பெரியவன், பரிபூரணமானவன் புகழனைத்தும் அவனுக்குரியவை என்றும், அவனுக்கு அழகிய திருநாமங்களும் உயர் பண்புகளும் உள்ளன என்றும், அவற்றில் அவனுக்கு நிகரான அவனுக்கு ஒப்பான எதுவும் கிடையாது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
2- மலக்குகளை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
மலக்குகள் அல்லாஹ்வின் படைப்பாகும். அவர்களை அவன் ஒளியினால் படைத்தான். மேலும் அவர்கள் அவனை வணங்கி வழிபடவும் அவனின் கட்டளைக்கு முற்றாக அடிபணிந்து நடக்கவுமே படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் ஜிப்ரீல் (அலை) பிரதானமானவர். அவரே வஹியெனும் இறைச்செய்தியை அல்லாஹ்விடமிருந்து நபிமார்களுக்கு கொண்டுவருபவர்.
3- வேதங்களை நம்புதல் (ஈமான் கொள்ளுதல்) :
அல்லாஹ் தனது தூதர்களுக்கு இறக்கி அருளிய இறைச்செய்தி அடங்கிய நூல்களே வேதங்களாகும். அந்த வகையில்,
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல் குர் ஆன்,
நபி ஈஸா (அலை) மீது அருளப்பட்ட இன்ஜீல் வேதம்,
நபி மூஸா (அலை) மீது அருளப்பட்ட தவ்ராத் வேதம்,
நபி தாவூத் (அலை) மீது அருளப்பட்ட ஸபூர் வேதம்,
இப்ராஹீம் மற்றும் மூஸா இருவருக்கும் வழங்கப்பட்ட ஏடுகள் போன்றவை இதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
4- இறைத்தூதர்களை நம்புதல் :
இறைத்தூதர்கள் என்போர் அல்லாஹ் தனது அடியார்களுக்கு கற்றுகொடுப்பதற்காகவும், அவர்களுக்கு நன்மை மற்றும் சுவர்க்கம் குறித்து நன்மாராயம் கூறவும், தீமை மற்றும் நரகம் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் அவனின் புறத்திலிருந்து அனுப்பிய உத்தம மனிதர்களைக் குறிக்கும்,
அவர்களுள் மிகவும் சிறப்புக்குரியோர் (உலுல் அஸ்ம்) திட உறுதிபூண்டோர் என்போர் ஆவர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு :
நூஹ் அலைஹிஸ்ஸலாம்,
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,
மூஸா அலைஹிஸ்ஸலாம்,
ஈஸா அலைஹிஸ்ஸலாம்,
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர் ஆவர்.
5- இறுதி நாளை விசுவாசம் கொள்ளுதல் (மறுமை நாளை நம்புதல்) :
அதாவது மரணத்தின் பின்னுள்ள மண்ணறை வாழ்வு, மற்றும் மறுமை நாள், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபட்டு விசாரணை செய்யப்படும் நாள் போன்றவற்றை இது குறிக்கும். அந்நாளில் சுவர்க்கவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நரகவாதிகள் அவர்களுக்குரிய தங்குமிடங்களிலும் நிரந்தரமாக தங்கிவிடுவர் என்பதை நம்புவதாகும்.
6- நன்மை, தீமை இறைவிதியின் படியே நடக்கும் என்பதை ஈமான் கொள்ளுதல் :
விதி என்பது இப்பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்தையும் முழுமையாக அல்லாஹ் நன்கறிவான் என்றும், பிரபஞ்ச நிகழ்வுகள் குறித்து லவ்ஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிந்து வைத்துள்ளான் என்றும், அவன் இவ்வாறான ஒழுங்கு இருக்க வேண்டுமென நாடி அதனை உருவாக்கினான் என்றும் நம்புவதாகும்.
இது குறித்து அல்லாஹ் :
"நாம் ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவோடு படைத்துள்ளோம்". (ஸூறதுல் கமர் 49)
கழாகத்ர் எனும் நம்பிக்கையானது நான்கு படித்தரங்களை கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு :
முதலாவது : அல்லாஹ்வின் அறிவுபற்றியதாகும். அவற்றில் இப்பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா நிகழ்வுகள் அதாவது அவை நிகழ்வதற்கு முன்னும் நிகழ்ந்த பின்னரும் அது குறித்த அவனின் முன்னறிவை குறிப்பிடலாம்.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
"நிச்சயமாக மறுமைநாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான், அவனே கருவறையில் உள்ளவைகளையும் நனகறிவான். எந்த ஆன்மாவும்; தான் நாளை எதைச் சம்பாதிக்கும் என அறியமாட்டாது. மேலும், எந்த ஆன்மாவும் தான் எந்தப் பூமியில் மரணிக்கும் என்பதை அறியமாட்டாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மிக நுட்பமானவன்". (ஸுறது லுக்மான்:34)
இரண்டாவது : இவற்றை அல்லாஹ் லவ்ஹுல் மஹ்பூலில் ஆரம்பத்தில் எழுதி விட்டான். அதாவது நடந்தவை நடக்கவிருப்பவை யாவும் அதில் எழுதப்பட்டுவிட்டன.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
"மறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். தரையிலும், கடலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். எந்த ஓர் இலையும் அதை அவன் அறியாமல் உதிருவதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையோ, பசுமையானதோ, உலர்ந்ததோ எதுவாயினும் அவனுடைய தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை". (ஸூறதுல் அன்ஆம் :59)
மூன்றாவது : எல்லா விடயங்களும் அவனின் நாட்டபடியே நிகழும். அவனிடமிருந்தும் படைப்பினங்களிடமிருந்தும் நிகழ்பவை யாவும் அவனின் நாட்டப்படியே நிகழ்கிறது.
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
"இது உங்களில் யார் நேர் வழி நடக்கவிரும்புகிறாறோ அவருக்குரியதாகும். இதை அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலேயன்றி நீங்கள் நாடமாட்டீர்கள்". (ஸுறதுத் தக்வீர் 28-29)
நான்காவது : அனைத்து படைப்பினங்களையும் அல்லாஹ்வே படைத்தான் என்றும் அவற்றை அவன் படைக்கும் போது அவற்றின் தனித்தன்மைகளையும் குணங்களையும் அங்க அசைவுகளையும், அவற்றின் அனைத்து விடயங்ளையும் அவனே படைத்தான் என்பதையும் உறுதியாக நம்புதல் (ஈமான் கொள்ளுதல்).
இதற்கான ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் கூற்றாகும் :
"அல்லாஹ்வே உங்களையும், நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றையும் படைத்தான்". (ஸூறதுஸ்ஸாப்பாத் : 96).

பதில் - அல்குர்ஆன் என்பது உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் பேச்சாகும் -வார்த்தையாகும்-, அது படைக்கப்பட்டதல்ல.
அல்லாஹ் கூறுகிறான் :
"இணைவைப்பாளர்களில் எவராவது ஒருவர் உன்னிடம் புகழிடம் கோரினால் அவர் அல்லாஹ்வின் வார்த்தையை செவியேற்கும் வரையில் அவருக்கு புகழிடம் வழங்குங்கள்". (ஸூறதுத் தவ்பா : 6)

அஸ்ஸுன்னா என்பது நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும், அங்கீகாரமும் அவர்களது குணாதிசயமும் உடல் கட்டமைப்பும் தொடர்பான விடயங்களுமாகும்.

பதில் - பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் காலத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் மனிதர்கள் புதிதாக தோற்றுவித்த அனைத்தையும் குறிக்கும்.
இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ளாது புறக்கணிப்போம்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் : "(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படும் எல்லா பித்அத்துக்களும் (நூதன அனுஷ்டானங்களும்) வழிகேடாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆதாரம் : அபூதாவூத்
இதற்கான உதாரணங்களாக வணக்கத்தில் குறிப்பிடப்பட்ட வற்றிற்கு மேலதிகமாக செய்தலை குறிப்பிடலாம். அதாவது வுழு செய்கின்ற போன்று நாளாவது முறை உறுப்புகளை கழுவுதல், அதே போன்று நபியவர்களின் பிறந்த தின விழாக் கொண்டாடுதல், இவற்றிற்கான வழிகாட்டல்கள் நபியவர்களிடமிருந்தோ அல்லது அவர்களது தோழர்களிடமிருந்தோ கிடைக்கவில்லை.

பதில் : அல்வலாஉ (நேசம் வைத்தல்) என்பது முஃமின்களை -இறைவிசுவாசிகளை- நேசித்து அவர்களுக்கு உதவிபுரிதல் ஆகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர்". (ஸூறதுத் தவ்பா:71).
அல்பராஉ' :
என்பது (உபதேசம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலம் நேர்வழியை தெளிவுபடுத்தியதன் பின்) இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ்வுக்காக வெறுத்து தூரமாக விலகிக் கொள்ளலை குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிச்சயமாக இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. அவர்கள் தமது சமூகத்தாரிடம் நிச்சயமாக நாம் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதை விட்டும் விலகிக் கொண்டவர்களாவோம். உங்களை நாம் நிராகரித்து விட்டோம். மேலும் நீங்கள் அல்லாஹ் ஒருவனை ஈமான் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகைமையும், விரோதமும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது!". (ஸூறதுல் மும்தஹினா :4)

பதில் : இஸ்லாம் அல்லாத எந்த மார்க்கத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்
அல்லாஹ் கூறுகிறான் : "யார் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக ஏற்க விரும்புகின்றானோ அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவன் மறுமையில் நஷ்டவாளர்களில் உள்ளவனாவான்". (ஸூறது ஆல இம்ரான் :85)

பதில்: சொல் ரீதியான (குப்ர்) இறை நிராகரிப்பிற்கான உதாரணம், அல்லாஹ்வை அல்லது அவனின் தூதரை நிந்தித்தல் மற்றும் திட்டுதல்.
செயல் சார்ந்த (குப்ருக்கு) இறை நிராகரிப்பிற்கான உதாரணம் அல்குர்ஆனை அவமதித்தல் அல்லது அல்லாஹ்வைத் தவிர்த்து பிறருக்கு ஸுஜுது செய்தல் (வணக்கம் செலுத்துதல்).
நம்பிக்கை சார் (குப்ருக்கான) இறை நிராகரிப்பிற்கான உதாரணம், அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு தகுதியானோர் உள்ளனர் அல்லது அல்லாஹ்வுக்கு நிகராக வேறு படைப்பாளன் உள்ளான் என நம்புதல்.

பதில் : நிபாக் என்றால் நயவஞ்சகம் என்பது பொருளாகும். அது இரு வகைப்படும : அந்நிபாகுல் அக்பர் (பெரிய நிபாக்) அந்நிபாகுல் அஸ்கர் (சிறிய நிபாக்).
1. அந்நிபாகுல் அக்பர் (பெரிய நயவஞ்சகத்தனம்) என்பது உள்ளத்தில் (குப்ரை) இறைநிராகாரிப்பை மறைத்து வெளிப்படையில் இறைவிசுவாசத்தை வெளிக்காட்டுவதாகும்.
இவ்வகை (குப்ர்) நிராகரிப்பு இஸ்லாத்ததை விட்டும் முழுமையாக ஒரு மனிதனை வெளியேற்றிவிடுகிறது. இது பெரியவகை இறைநிராகரிப்பில் (அல்குப்ருல் அக்பர்) உள்ள ஒன்றாகும்.
அல்லாஹ் கூறியுள்ளான் :
"நிசயமாக நயவஞ்கர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியாளரையும் நீர் காணமாட்டீர்". (ஸூறதுன்னிஸா :145)
2- அந்நிபாகுல் அஸ்கர் : சிறிய நிபாக்
இதற்கு உதாரணமாக பொய் கூறுதல், வாக்கிற்கு மாறு செய்தல் அமானித மோசடி (நம்பிக்கைத் துரோகம்) ஆகியவற்றைக் கூறலாம்.
இவ்வகை நிபாகானது இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடாது. இது பாவமாக கருதப்படும், இச்செயலை செய்வோர் தண்டனைக்கு உட்படுவர்.
நபி (ஸல்) அவர்கள் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : நயவஞ்கனின் அடையாளம் மூன்று : பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பினால் துரோகம் இழைப்பான்'. (புஹாரி, முஸ்லிம்)

பதில்: முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அல்லாஹ் கூறுகிறான் : "முஹம்மத் உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார்". (ஸூறதுல் அஹ்ஸாப்: 40) நபி (ஸல்) கூறுகிறார்கள் : நான் நபிமார்களின் (முத்திரையாக) இறுதியானவராக உள்ளேன், எனக்குப்பிறகு எந்த நபியும் கிடையாது'. அபு தாவூத், திரிமிதி மற்றும் ஏனையோர் இதனை அறிவித்துள்ளனர்.

பதில் : முஃஜிஸா என்பது அல்லாஹ் நபிமார்களுக்கு தங்களின் உண்மைநிலையை உறுதிப்படுத்துவதற்காக வழங்கிய வழமைக்கு மாறான விடயங்கள் அனைத்தையும் குறிக்கும். இதற்கான உதாரணங்களாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும் :
முஹம்மத் நபியவர்களுக்காக சந்திரன் பிளந்தமை,
மூஸா (அலை) அவர்களுக்கு கடல் பிளந்தமை, பிர்அவ்னும் அவனின் படையினரும் மூழ்கடிக்கப்பட்டமை.

பதில் : நபியவர்களை ஈமான் கொண்ட நிலையில் சந்தித்து புனித இஸ்லாத்தில் மரணித்தவரே ஸஹாபியாவார்
நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அவர்களை பின்பற்றி நடக்க வேண்டும். அவர்கள்தான் நபிமார்களுக்குப் பிறகு மனிதர்களில் மிகவும் சிறப்புக்குரியோர் ஆவார்கள்.
அவர்களில் மிகவும் சிறந்தோர் நான்கு கலீபாக்களாவார்கள்:

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு,
உமர் ரலியல்லாஹு அன்ஹு,
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு,
அலி ரழியல்லாஹு அன்ஹு ஆகியோராவர்.

பதில் : நபி (ஸல்) அவர்களின் மனைவியர் ஆவர்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கையாளர்களுக்கு தமது உயிர்களைவிட நபியே மிக்க மேலானவராவார். அவரது மனைவியர் அவர்களின் தாய்மார்களாவர்". (ஸூறதுல் அஹ்ஸாப்: 6)

பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், அவர்களை யார் வெறுக்கிறார்களோ அவர்களை வெறுத்து நடக்க வேண்டும்; அவர்களை நேசிக்கும் விடயத்தில் எல்லை மீறாது நடந்து கொள்ள வேண்டும். நபியவர்களின் குடும்பத்தில் அவர்களின் மனைவியர், சந்ததிகள், பனூஹாஷிம் குடும்பத்தினர் பனுல்முத்தலிப் குடும்பத்தினரில் உள்ள இறைவிசுவாசிகள் அடங்குவர்.

பதில்: அவர்களை மதித்து நடந்து கொள்வதும், பாவகாரியமல்லாத விடயங்களிள் அவர்களுக்கு கட்டுப்பட்டு அவர்களின் கட்டளைகளுக்கு செவிசாய்ப்பதும், அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யாதிருப்பதும், அவர்களுக்காக பிரார்த்தனை புரிவதும், அவர்கள் நலன் நாடி இரகசியமாக அறிவுறை கூறுவதும் எம்மீதுள்ள கடமையாகும்.

பதில் : இறைவிசுவாசிகளின் வீடு சுவர்க்கமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : "நிச்சயமாக அல்லாஹ் ஈமான் (நம்பிக்கை) கொண்டு ஸாலிஹான நல்லறங்கள் புரிவோரை சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்". (ஸூறா முஹம்மத் : 12)

பதில் :காபிர்களின் (இறை நிராகரிப்பாளர்களின்) வீடு தங்குமிடம் நரகமாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான் : "தீய மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது தயார் செய்யப்பட்டுள்ளது". (ஸூறதுல் பகரா :24)

பதில் : பயமென்பது (அல் கவ்ப்) அல்லாஹ்வையும் அவனது தண்டனையும் பயப்படுவதைக் குறிக்கும்.
(அர்ரஜாஉ) ஆதரவு வைப்பது என்பது அல்லாஹ்வின் வெகுமதியையும் மன்னிப்பையும் மற்றும் கருணையையும் ஆதரவு வைப்பதைக் குறிக்கும்.
இதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் :
"(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை அழைத்துப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களில் (அல்லாஹ்வுக்கு) மிகவும் நெருக்கமானவர்களாய் ஆவதற்கு தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்த்து ஆதரவு வைக்கின்றனர்.மேலும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது". (ஸூறதுல் இஸ்ரா : 57) மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் : "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனுமாவேன், மேலும் எனது தண்டனை நோவினை தரக்கூடிய தண்டனையாகும் என்று எனது அடியார்களுக்கு நபியே நீர் அறிவிப்பீராக!". (ஸூறதுல் ஹிஜ்ர் :49-50)

பதில் : அல்லாஹ், அர்ரப்பு (இரட்சகன்), அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்), அல்பஸீரு (யாவற்றையும் பார்ப்பவன்), அஸ்ஸமீஉ (யவற்றையும் செவியுறுபவன்), அல் அலீம் (யவற்றையும் நன்கறிபவன்), அர்ரஸ்ஸாக் (யாவற்றுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன்), அல் ஹய்யு (நித்திய ஜீவன்), அல் அழீம் (மகத்தானவன்), போன்ற இன்னும் பல திருநாமங்களும் உயர் பண்புகளும் அல்லாஹ்வுக்கு உண்டு.

பதில் : அல்லாஹ் என்பதன் அர்த்தம் உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் என்பதாகும். அவன் தனித்தவன் அவனுக்கு இணையாளன் எவரும் கிடையாது.
அர்ரப்பு :
(இரட்சகன்) என்பது படைத்து ஆட்சி செய்பவன், வாழ்வாதரத்தை வழங்கி, திட்டமிட்டு நிர்வகிக்கும் ஒருவன் என்பதைக் குறிக்கும்.
அஸ்ஸமீஉ :
(நன்கு செவியுறுபவன்) அதாவது எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் செவியேற்கும் ஆற்றல் விரிந்து காணப்படுகிறது. ஆகையால் அவன் பல்வகையான வேறுபட்ட வித்தியாசமான அனைத்து சப்தங்களையும், ஓசைகளையும் கேட்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல்பஸீரு :
(நன்கு பார்ப்பவன்) அதாவது, எல்லா விடயங்களையும் பார்ப்பவன். சிறிய பெரிய அனைத்து விடயங்களையும் நன்கு பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது இதன் கருத்தாகும்.
அல் அலீம் :
(நன்கறிபவன்) என்பது, அல்லாஹ் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றிய அனைத்தையும் முழுமையாக அறிந்தவன் என்பது பொருளாகும்.
அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்பது, அவனின் அருளானது -கருணை- அனைத்து படைப்பினங்கள் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது –ஆகவே எல்லா அடியார்களும் படைப்பினங்களும் அவனின் அருளின் -கருணையின்- கீழ்தான் உள்ளனர்.
அர்ரஸ்ஸாக் (வாழ்வாதாரத்தை வழங்குபவன்) : அதாவது அவனது படைப்புகளான மனித இனம், ஜின் இனம் மிருகங்கள் போன்ற எல்லாப் படைப்புகளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குபவன் என்பது பொருளாகும்.
அல் ஹய்யு (நித்திய ஜீவன்) என்பது : மரணிக்காது உயிர் வாழ்பவன். அனைத்துப் படைப்பினங்களும் மரணித்துவிடும்.
அல் அழீம் (மகத்தானவன்): பெயர்கள், பண்புகள், செயல்கள் ஆகிய அனைத்திலும் மகத்துவமும் பரீபூரண நிலையும் அவனுக்கு –அல்லாஹ்விற்கு- மாத்திரமே உரியது.

பதில் : நாம் அவர்களை நேசிக்க வேண்டும், அத்துடன் சட்டப் பிரச்சினைகள் மற்றும் புதிதாக தோன்றும் (இடர்கால) பிரச்சினைகள் தொடர்பாக அவர்களிடம் சென்று உரிய மார்க்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் குறித்து நல்லதையே பேச வேண்டும். அவர்கள் பற்றி யார் மோசமாக பேசுகிறாரோ அவர்கள் நல்லோர் பாதையில் செல்வோர் அல்லர்.
அல்லாஹ் கூறுகிறான் :
"உங்களில் எவர் ஈமான் கொண்டு அறிவும் வழங்கப்பட்டு உள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துகிறான் மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்". (ஸூறதுல் முஜாதிலா :11)

பதில் : அல்லாஹ்வின் நேசர்கள் என்போர் அல்லாஹ்வை பயந்து நடக்கும் இறையச்சமுள்ள முஃமின்கள் ஆவர்.
அல்லாஹ் கூறுகிறான் :
"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை அஞ்சி நடப்போராக இருப்பார்கள்". (ஸூறா யூனுஸ் :61-62)

ஆம், ஈமான் (இறைவிசுவாசம்) என்பது சொல், செயல் மற்றும் நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

பதில் : ஆம், ஈமான் வணக்கத்தின் மூலம் அதிகரிக்கிறது பாவத்தின் மூலம் குறைந்து விடுகிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கையாளர்கள் யாரெனில் அல்லாஹ்வைப்பற்றி ஞாபகமூட்டப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடு நடுங்கும். அவனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அது அவர்களின் ஈமானை (நம்பிக்கையை) அதிகரிக்கச் செய்யும். மேலும், அவர்கள் தங்களுடைய இறைவனையே முழுவதும் சார்ந்திருப்பார்கள்". (ஸூறதுல் அன்பால்: 2)

பதில் : இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.

பதில் : செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட இரு நிபந்தனைகள் உள்ளன:
1- அல்லாஹ்வின் திருமுகம் நாடி தூய்மையான முறையில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.
2- நபியவர்களின் வழிமுறைப்படி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

பதில் : காரணகாரியங்களை மேற்கொண்டு நன்மையை அடைந்து கொள்ளவதிலும் தீங்கிலிருந்து தடுத்துக்கொள்வதிலும் அல்லாஹ்வின் மீது முழுமையாக சார்ந்து இருப்பதையே 'தவக்குல்' என்று கூறப்படும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"யார் அல்லாஹ்வின் மீது பொறுப்பை ஒப்படைக்கிறானோ அவனே அவருக்கு போதுமானவன்" (ஸூறதுத் தலாக் : 3)
(ஹஸ்புஹு) என்றால் போதுமானவன் என்பது பொருளாகும்.

பதில் : 'அல் மஃரூப்'; என்பது அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு கீழ்பணிந்து நடக்கக் கூடிய அனைத்து நன்மையான காரியங்களையும் ஏவுதல் என்பது பொருளாகும், 'அல் முன்கர்' என்பது அல்லாஹ்வுக்கு முரணான பாவகாரியங்கள் அனைத்தை விட்டும் தடுப்பதைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"மனிதர்களுக்காக தோற்றுவிக்க்கப்பட்ட சிறந்த சமூகமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள் தீமையை தடுக்கின்றீர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஸூறது ஆலி இம்ரான் :110)

பதில்: சொல், செயல் மற்றும் நம்பிக்கை சார் விடயங்களில் நபியவர்களும், அவர்களின் தோழர்களும் எந்நிலைப்பாட்டை கொண்டிருந்தார்களோ அதே நிலைப்பாட்டை கொண்டோரே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஆ என்போர் ஆவர்.
இவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா என்ற சிறப்புப் பெயரால்; அழைக்கப்படுவது நபியவர்களின் ஸுன்னாவை பின்பற்றி பித்அத்தை விட்டு விட்டதினாலாகும்.
அல்ஜமாஆ என்பதன் மூலம் கருதப்படுவது, அவர்கள் சத்தியத்தில் ஒன்றுபட்டு அதில் தங்களுக்கு மத்தியில் பிரிந்து விடாதிருப்போர் என்பதாகும்.