பல்வகை அம்சங்களை உள்ளடக்கிய பகுதி :

பதில் :
1- வாஜிப் (கட்டாயக் கடமை).
2- முஸ்தஹப் (விரும்பத்தக்கவை).
3- (முஹர்ரம்) கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டியவை.
4- (மக்ரூஹ்) வெறுக்கத்தக்கவை.
5- முபாஹ் (ஆகுமானவை).

பதில் :
1- வாஜிப் கட்டாயம் செய்யவேண்டியவை என்பதற்கு உதாரணங்கள் ஜவேளைத் தொழுகை, ரமழானில் நோன்பு நோற்றல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளாகும்.
வாஜிப் என்பது செய்தவருக்கு நற்கூலியும் செய்யாதவருக்கு தண்டனையும் வழங்கப்படுகின்ற இறை கட்டளையை குறிக்கும்.
2- முஸ்தஹப் விரும்பத்தக்கது என்ற சட்ட நிலைக்கான உதாரணம், பர்ழான தொழுகையின் முன் பின் ஸுன்னத்துக்கள், கியாமுல்லைல் தொழுகை, உணவளித்தல், ஸலாம் கூறுதல் போன்றனவாகும். முஸ்தஹப் என்பது ஸுன்னத் அல்லது மன்தூப் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என்பது செய்தவருக்கு நற்கூலி வழங்கப்படுவதுடன் செய்யாதிருந்தவருக்கு தண்டனையேதும் வழங்கப்படாத இறை கட்டளைகளாகும்.
முக்கிய குறிப்பு :

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை ஓரு விடயம் ஸுன்னா அல்லது முஸ்தஹப்பான செயல் என்று கேள்விப்பட்டால் அதனை நபியவர்களை பின்பற்றிச் செய்யவதற்கு விரைய வேண்டும். (இது சுன்னாதானே என பொடுபோக்காக இருத்தலாகாது. அவ்வாறு இருந்தால் காலப்போக்கில் அவர் கட்டாயக்கடமைகளையும் படிப்படியாக விட்டுவிடுகின்ற நிலை ஏற்படலாம்.)
3- 'அல் முஹர்ரம்'; முற்றாக தடுக்கப்பட்டது என்பதற்கான உதாரணம் : மது அருந்துதல், பெற்றோரை துன்புறுத்தல் , உறவுகளை துண்டித்து நடத்தல் போன்றவைகள்.
அல் முஹர்ரம்' குறிப்பிட்ட தடுக்கப்பட்ட விடயத்தை செய்யாதிருந்தால் மறுமையில் அதற்கான நற்கூலியும் அதனைச் செய்தால் தண்டனையும் கிடைக்கும்.
4- 'அல் மக்ரூஹ்' வெறுக்கத்தக்கவற்றிற்கு உதாரணம் : இடது கையால் ஒரு பொருளை எடுப்பதும் கொடுப்பதும் , தொழுகையில் ஆடையை மடித்துக் கொள்வது போன்றவைகளாகும்.
(அல் மக்ரூஹ்) என்பது குறிப்பிட்ட செயலை செய்யாதிருந்தால் மறுமையில் நற்கூலி கிடைப்பதுடன் அதனை செய்வதால் தண்டனை வழங்கப்படமாட்டாது.
5- 'அல்முபாஹ்' ஆகுமானவை என்பதற்கான உதாரணம் அப்பிள் பழம் சாப்பிடுதல், தேநீர் அருந்துதல் போன்றவைகளாகும். இது 'ஜாஇஸ்'; 'ஹலால்'; என்ற பெயர்களாலும் அழைக்கப்படும்.
குறிப்பிட்ட ஆகுமான (முபாஹ்) விடயத்தை விட்டுவிடுவதால் மறுமையில் நற்கூலியோ அதனை செய்வதால் தண்டணையோ கிடைக்கமாட்டாது என்பதைக் குறிக்கும்.

பதில் : வியாபாரம், இதர கொடுக்கல் வாங்கல்களில் அல்லாஹ் தடை செய்துள்ள சிலவற்றைத் தவிர ஏனையவற்றின் அடிப்படைச் சட்டம் ஹலாலாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துள்ளான்". (ஸூறதுல் பகரா : 275).

பதில் :
1- மோசடி செய்தல். வியாபாரப் பொருளின் குறையை மறைத்து விற்றல் வியாபாரத்தில் மோசடி செய்வதில் உள்ளதாகும்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள்: "அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல" என்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம் .)
2- வட்டி: அதாவது ஒருவரிடம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கும் போது அதனை திருப்பி செலுத்தும் சமயம்இரண்டாயிரம் ரூபா கொடுப்பதாக் கூறி கடன் பெறுவது வட்டிசார்ந்த பரிவர்ந்தனை முறையாகும்.
அதாவது கடன் பெறும் போது பெற்றதை விட மேலதிகமாக தருவதாக நிபந்தனையிடுவது வட்டியாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துள்ளான்". (ஸூறதுல் பகரா :275).
3- ஏமாற்றுதல் மற்றும் காணாத அல்லது அறியாத ஒன்றை விற்றல் வாங்குதல் : உதாரணமாக ஆட்டின் பால் மடியில் உள்ள பாலை உனக்கு விற்கிறேன். அல்லது நீர் நிலையொன்றைக் காட்டி இதில் உள்ள மீன்களை விற்கிறேன் என்று கூறி வியாபாரம் செய்தலைக் குறிக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மோசடி வியாபாரத்தை தடை செய்தார்கள்' என ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : 1- இஸ்லாம் எனும் அருளாகும். ஏனெனில் நீ ஒரு முஸ்லிமாய் இருக்கிறாய், நீ காபிர்களின் ஒருவன் அல்ல.
2- ஸுன்னா எனும் அருள், ஏனெனில் நீ நபிவழியைப் பின்பற்றும் ஒருவனாக உள்ளாய், நீ பித்அத் வாதிகளில் உள்ளவனல்ல.
3- கேட்டல், பார்த்தல், நடத்தல் போன்ற ஆரோக்கியம் சார்ந்த அருள்கள்.
4- உணவு, குடிபானம், உடை சார்ந்த அருள்கள்.
எம் மீதான அல்லாஹ்வின் அருள்கள் அதிகமானவை. அவற்றை எண்ணி கணக்கிட முடியாது.
அல்லாஹ் கூறுகின்றான் :
"நீங்கள் அல்லாஹ்வின் அருள்களை எண்ணினால் அதனை கணக்கிட்டுகொள்ளமாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மாபெரும் மன்னிப்பாளனும் கருணையாளனுமாவான்". (ஸூறதுன் நஹ்ல் :18)

பதில் - எமது நாவால் அவனை போற்றிப் புகழ்ந்து நன்றி செலுத்துவதே அவ்வருள்களுக்கு நாம் செய்யும் கடமையாகும், ஏனென்றால் அவனுக்கு மாத்திரமே அதன் சிறப்பு இருக்கிறது, மேலும் அவனால் தரப்பட்டுள்ள அருள்களினால் அவனுக்கு மாறு செய்யாது அவற்றை அவன் திருப்தியுரும் செயற்பாடுகளில் பயன்படுத்துதல் வேண்டும்.

பதில் : முஸ்லிம்களுக்கு இருபெருநாட்கள் உள்ளன.1-நோன்புப் பெருநாள், 2- ஹஜ்ஜுப் பெருநாள்.
இது குறித்து பின்வரும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது :
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனா வாசிகளுக்கு விளையாடி மகிழ்வதற்கான விஷேடமான இரு தினங்கள் இருந்தன, அப்போது நபியவர்கள் இந்த இரு தினங்கள் குறித்து அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் நாங்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் இவ்விரு தினங்களிலும் விளையாடுபவர்களாக இருந்தோம், என்று கூறவே அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் : நிச்சயமாக அல்லாஹ் இந்த இரண்டு நாட்களுக்கும் பதிலாக ஈதுல் அழ்ஹா மற்றும் ஈதுல் பித்ர் எனும் பெருநாட்களை அளித்துள்ளான்' என்று கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்).
இவ்விரு பெருநாட்கள் தவிர்ந்த ஏனைய பெருநாட்கள் பித்அத்ஆவாகும். அதாவது நபிவழிக்கு முரணாண பெருநாட்களாகும்.

பதில் : ஜும்ஆ நாளாகும் (வெள்ளிக்கிழமையாகும்).

பதில் : அறபா நாளாகும் (துல் ஹஜ் மாதம் 09ம் நாள்).

பதில் : லைலதுல் கத்ர் இரவாகும்.

பதில் : பார்வைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "முஃமினான ஆண்களுக்கு அவர்களின் பார்வைகளைப் பேணிக் கொள்ளுமாறு நபியே நீர் கூறுவீராக". (ஸூறதுன் நூர் : 30)

1- பாவத்தைத் தூண்டும் உள்ளம். அதாவது மனிதன் தனது உள்ளம் கூறுவதற்கு கட்டுப்பட்டு மனோ இச்சையைப்பின்பற்றி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடுதல். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "எனது இரட்சகன் அருள்புரிந்தாலேயன்றி மனம் தீமையைத் துண்டக் கூடியதாவே உள்ளது. நிச்சயமாக எனது இரட்சகன் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன்". (ஸுறா யூஸுப் : 53). 2- ஷைத்தான் : அவன் ஆதமின் மகனின் எதிரியாவான், அவனின் இலக்கு அவர்களை வழிதவறச் செய்து தீய ஊசாலாட்டங்களை அவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி நரகத்தினுள் நுழைவிப்பதாகும். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான்". (ஸூறதுல் பகரா : 168). 3- தீய நண்பர்கள்: நன்மையான காரியங்களைவிட்டும் தடுத்து, தீய காரியங்களில் ஈடுபடத் தூண்டுபவர்கள். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "அந்நாளில் பயபக்தியாளர்களைத் தவிர நண்பர்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகளாக இருப்பர்". (ஸுறதுஸ் ஸுஹ்ருப் : 67)

பதில் : தவ்பா என்றால் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைவிட்டும் அவனை வழிபடுவதின்பால் திரும்புதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : "எவர் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நல்லறங்களைப் புரிந்து பின்பு நேர்வழி நடக்கின்றானோ அவரை நான் நிச்சயம் மன்னிப்பவனாக இருக்கிறேன்". (ஸூறா தாஹா : 82)

பதில் - 1-பாவத்தை விடுதல்: உடனே பாவத்தைக் கைவிட வேண்டும்.
2- செய்த பாவத்தைக் குறித்து வருந்துதல்.
3- இனியும் அப்பாவத்தை எக்காலத்திலும் செய்வதில்லை என்று உறுதி கொள்ளுதல்.
4- அடியார்களின் உரிமைகளில் அநியாயம் நிகழ்ந்திருந்தால் அவ்வுரிமைகளை அவர்களுக்கு மீளளித்தல்.
அல்லாஹ் கூறுகின்றான் :
"மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் நிலைத்திருக்க மாட்டார்கள்". (ஸூறா ஆலி இம்ரான் : 135).

பதில் : அல்லாஹ் தனது நபியை மிகச்சிறந்த கூட்டத்தில் பாராட்டுமாறு அவனிடம் பிரார்த்திப்பதே இதன் கருத்தாகும்.

பதில் : தஸ்பீஹ் என்பது அல்லாஹ் எல்லாவகையான தீங்குகள், குறைகளைவிட்டும் தூய்மையானவன் என அவனைத் துதிப்பதாகும்.

பதில் - அல்லாஹ்வை புகழ்ந்து பாராட்டி நிறைவான அனைத்து பண்புகளினாலும் அவனை வர்ணித்தல்.

பதில் - அந்த பரிசுத்தமான இரட்சகன் எல்லாவற்றைவிடவும் மிகப் பெரியவன், எல்லாவற்றைவிடவும் மிக உயர்வானவனாகவும் கண்ணியமிக்கவனாகவும் உன்னதமானவனாவும் உள்ளான் என்பதாகும்.

பதில் : ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு ஒரு அடியான் மாறுவதற்கான எந்த சக்தியும் அல்லாஹ்வின் உதவியினாலேயன்றி வேறு யாராலும் முடியாது எந்பதாகும்.

பதில் : பாவத்தை நீக்கி குறைகளை மறைத்து விட வேண்டும் என்று அடியான் தனது இரட்சகனிடத்தில் வேண்டுவதாகும்.